இலங்கையர்களுக்கான புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Passport
Mayoorikka
2 years ago
இலங்கையர்களுக்கான புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையர்களுக்கு பாதுகாப்பானதும், புதுப்பிக்கப்பட்டதுமான முறையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ஜூலை 16 ஆம் திகதி முதல் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன் பதிவு செய்து கொள்ள முடியும் மேலும், முன் பதிவு செய்துள்ள கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருமாறும், முன் பதிவு இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 பதிவு செய்ததன் பின்னர், முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4