முன்னாள் சுகாதார அமைச்சருக்கு கௌரவிப்பு விழா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் சுகாதார அமைச்சருக்கு கௌரவிப்பு விழா!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சந்தியலிங்கத்தினால் நெதர்லாந்து அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 60 மில்லியன் யூரோ நிதியின் ஊடாக  வடக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் அவரது உன்னத பணிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  இன்று (27.07)  இடம்பெற்றது.  

குறித்த நிகழ்வானது நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.  

இதன் போது மருத்துவர் ப.சத்தியலிங்கத்திற்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கலாநிதி எம்.பி.நடராஜா, து.ரவீகரன், மேரிகமலா, சம்பந்தன் மற்றும் பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4