முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை விரதம்!!
நாளைய தினம் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி 29-07-2024 திங்கள்க்கிழமை கிருத்திகை விரதம். பெரும்பாலான கோவிகளில் கார்த்திகை மஹா அபிஷேகம் திங்கட்கிழமை நடைபெறுகிறது .
அன்று மாலை திருவாரூர் கமலாம்பாள் ஆடிப்பூர விழா கொடியேற்றம் இரவு 7-30 மணிக்குமேல் 8-30 மணிக்குள் நடைபெறுகிறது.
கார்த்திகை நட்சத்திரம் பிற்பகல் 2-40 நட்சத்திரம் ஆரம்பம் .. 30-07-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1-40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது..
ஆரூரா கமலாம்பாள் ஓம் சரவணபவ ஆடிக்கிருத்திகை 2024
இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையானது ஜூலை 30ம் திகதி செவ்வாய்கிழமை வருகிறது. ஜூலை 29ம் தேதி பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01.40 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.
ஜூலை 29ம் தேதி பகல் பொழுதிலேயே கிருத்திகை நட்சத்திரம் துவங்கி இருந்தாலும், சூரிய உதயத்தின் போது இருக்கும் நட்சத்திரமே அன்றைய நாளுக்குரிய நட்சத்திரமாக கருத வேண்டும் என்பதால் ஜூலை 30ம் தேதியையே ஆடிக்கிருத்திகையாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும்.
அன்றைய தினம் முருக வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமை என்பதுடன், அம்பாளுக்குரிய ஆடி இரண்டாவது செவ்வாய் கிழமையும் கூட. இதனால் அம்பாள் மற்றும் முருகப் பெருமான் இருவரின் அருளும் ஆடிக்கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்கும்.