இலங்கையின் கடற்பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் கடற்பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாகஇலங்கையின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (28.07) அதிகாலை 3.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் மீன்பிடி மற்றும் கடற்தொழிலாளர் சமூகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென திணைக்களம் குறிப்பிடுகிறது.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (28) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. 50-55 வேகத்தில் காற்று வீசும்.

தீவின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுகிறது. 30-40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4