இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி!

இரண்டு பிரதேசங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இந்த விபத்துக்கள் நேற்று (27.07) இடம்பெற்றுள்ளன. 

இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி கலா லேக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.  

உருகுடா வெலிபன்ன பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, எஹதுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹெட்டிகம, மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4