ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்பூசல்களால் எழுந்துள்ள சிக்கல் நிலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்பூசல்களால் எழுந்துள்ள சிக்கல் நிலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

குறித்த வேலைத்திட்டம் நேற்று (27.07) ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று (28.07) நுவரெலியா மாவட்ட கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல உட்பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் இந்த பிரச்சினைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை சென்றுள்ளன.  

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரிலோ அல்லது சின்னத்திலோ இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை என்ற பின்னணியில் நெருக்கடி நிலை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அத்துருகிரிய பிரதேசத்தில் தனது தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தை ஆரம்பித்துள்ளார்.  

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திரு தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!