எழுமின் அமைப்பின் 16வது மாநாடு!! தமிழ் சங்கம் 5

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Tamil Sangam 5 #madurai
Thamilini
1 hour ago
எழுமின் அமைப்பின் 16வது மாநாடு!! தமிழ் சங்கம் 5

எழுமின் அமைப்பின் 16வது மாநாடான “தமிழ் சங்கம் 5”, மாமதுரை மாவட்டத்தில் 8ம் திகதி அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு, 11ம் திகதி கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் நிகழ்வுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

 இந்த மாநாட்டில், 50ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட தமிழர் வணிகத் துறை, பேரறிவு மற்றும் ஆற்றல் துறைசார்ந்தவர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அறிஞர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகளுடன் சுவிஸ் நாட்டில் இருந்தும் 30ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

தமிழ் சங்கம் 5 இன் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து, 2ம், 3ம் மற்றும் 4ம் சங்கமங்களை நடத்திய முன்னோடிகளின் புகைப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், மாநாட்டின் முக்கிய அங்கமாக உத்தியோகபூர்வ வணிக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

 இதனடிப்படையில், எழுமின் அமைப்பின் உப அமைப்புகளான

 • Global Tamil Engineering Forum

 • Tamil Doctor International

 • Tamil Women International

 • Global Logistic Forum

 • ஆற்றல் IT எனும் அமைப்புகளின் தனித்தனி வணிக கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்றன.

 வணிக கருத்தரங்குகளின் இறுதியில், கீழடி அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சியகத்தின் அருகில் மூன்று மதத் தலைவர்களின் முன்னிலையில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. 

இதில் தமிழர் பாரம்பரிய கிராமிய நடனங்கள், கிளித்தட்டு, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன. மேலும், 50 நாடுகளை அடையாளப்படுத்தும் வகையில் அந்தந்த நாட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டு, தனித்தனியாக 50 பொங்கல் பானைகள் வைத்து பொங்கி, உலகத் தமிழர்களின் ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தியது.

 இதனுடன், உலகத் தமிழர்களை ஒரே மேடையில் இணைத்த தமிழ் சங்கம் 5 மாநாடு பெருமையுடன் நிறைவு பெற்றது.

ஊடகத் தொடர்பு பிரிவு

 The Rise – எழுமின் அமைப்பு


images/content-image/1768827782.jpg

images/content-image/1768827859.jpg


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!