பாணிற்கு கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாணிற்கு கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தல்!

அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாண் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால் செய்யப்பட்டால் கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கடைக்கு 1 இலட்சம் ரூபாவும், ஒரு  நிறுவனத்திற்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்க முடியும் என சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சஞ்சய் இராசிங்க தெரிவித்தார். 

பாணிற்கு நிலையான விலை இல்லை என்றும் குறிப்பிட்ட பாணிற்கான நிலையான எடை இல்லை என்றும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினர் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர். அதன்படி, வாடிக்கையாளர் சேவை ஆணையம் இது தொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தியது. 

இவ்வாறானதொரு பின்னணியில், பெப்ரவரி 2ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட பாண் துண்டின் எடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.  

ஒரு பாணின்குறைந்தபட்ச எடை 450 கிராம் மற்றும் அரை ரொட்டியின் குறைந்தபட்ச எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4