எதிர்காலத்தில் டிப்ளோமா பட்டதாரிகள் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எதிர்காலத்தில் டிப்ளோமா பட்டதாரிகள் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்!

அடுத்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் 1,250 முன்னணி பாடசாலைகளை நட்பு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம் கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

 சீன அரசாங்கத்திடம் இருந்து 20 மில்லியன் டொலர்கள் மானியமாக பெறப்படும் என அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் உயர்தரப் பாடசாலையில் 1ஆம் தரம் தொடக்கம் 5ஆம் தரம் வரையிலான அனைத்து வகுப்பறைகளையும் சிநேகபூர்வ வகுப்பறைகளாக மாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், அடுத்த வருடம் முதல் 1-6-10 ஆம் வகுப்புகளுக்கு அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய கல்வி முறை தொடர்பான முன்னோடித் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவையான கற்றல் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், இந்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், பத்து ஆண்டுகளில் பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ள முடியாத ஒரு குழுவாக மாறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

 எதிர்காலத்தில் அனைத்து கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் எனக் கூறிய அவர்,  2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளங்கலை கல்விப் பட்டம் பெற்ற ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும், டிப்ளோமா பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4