பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

#Death #Accident #England #Boat
Prasu
4 months ago
பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பொருட்டு பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முயன்ற சிறு படகு ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் அவசர உதவிக் குழுக்களால் 34 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரெஞ்சு கடலோர காவல்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடலில் இன்னும் பல படகுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பிரெஞ்சு கடலோர காவல்படை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், படகு ஒன்று சிக்கலில் இருப்பதைக் கண்டு, ​​​​அதிகாலை 5.30 மணியளவில் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

படகில் இருந்தவர்கள் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், கடலோர காவல்படையினர் படகினை நெருங்கியபோது மயங்கிய நிலையில் பெண் ஒருவரை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மட்டுமின்றி, குறித்த படகில் இருந்து 34 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வதில் பிரித்தானியாவின் அணுகுமுறை மாறியுள்ளதாகவே கூறப்படுகிறது.

 சர் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் ருவாண்டா திட்டத்தை கைவிட்டதுடன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்க சுமார் 84 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!