மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்வதா! செப்டெம்பர் 21 மக்கள் தீர்மானிக்க வேண்டும்

#SriLanka #Election #economy
Mayoorikka
2 years ago
மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்வதா! செப்டெம்பர் 21 மக்கள் தீர்மானிக்க வேண்டும்

2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா என்பதை செப்டெம்பர் 21 நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

சஜித் பிரேமதாச,அனுரகுமார திஸாநாயக்க சிறந்த தலைவர்களல்ல என்பதை அவர்களே உறுதிப்படுத்தியுள்ளார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 

பொருளாதார நெருக்கடியின் போது மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களினால் நாடு இரண்டாண்டுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புக்களுக்காக எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

 மறுசீரமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைந்துள்ளது. எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னேற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.நெருக்கடிகளை மாத்திரமே ஏற்படுத்தினார்கள்.

 ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4