நிறைவேற்றத் தவறுவாராயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! சஜித் சூளுரை

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa
Mayoorikka
2 years ago
நிறைவேற்றத் தவறுவாராயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! சஜித் சூளுரை

அரசியலமைப்பில் உள்ள ஜனாதிபதியின் பொறுப்புகளை தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்றத் தவறுவாராயின் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 மொனராகலை - புத்தல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பொலிஸ் மா அதிபரின் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடியே தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

 தாம் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதன் காரணமாக பொலிஸ் மா அதிபரை தம்மால் நியமிக்க முடியாதென ஜனாதிபதி கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவ்வாறு அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை.

 அரசமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்வாராயின் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4