ஜீவன் தொண்டமானுக்கு நீதவான் வழங்கிய உத்தரவு
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தேக நபராக ஏற்றுக்கொள்ளாது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பொலிஸாருக்கு இன்று (29) உத்தரவிட்டார்.
இன்றைய தினம் 29.7.2024 ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நான்கு பேர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகி இருந்தனர். ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷான் குலதுங்க, சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சிவன்ஜோதி யோகராஜா ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
நுவரெலியா நீதிமன்ற நீதிபதி N.W.K.L பிரபூதிகா லங்காங்தனி முன்னிலையில் அவர் முன்னிலையாகி இருந்தார். இருப்பினும் நீதிபதி கூறியதாவது, இவ்வழக்கு தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பெயர் எவ்விடத்திலும் பரிந்துரைக்கப்படாத காரணத்தினால் இவ்வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அன்றைய தினம், இவ்வழக்கினை சரியாக விசாரித்து விசாரணைகள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.