விறுவிறுப்பான தேர்தல் களம்: ஜனாதிபதியின் கடிதத்தை பொதுஜன பெரமுன நிராகரிப்பு! தம்மிகவுக்கு வாய்ப்பு
எதிர்வரும் வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்குவதை அக்கட்சியின் செயற்குழு நிராகரித்துள்ளது அத்துடன் தனக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டி அக்கட்சிக்கு ஜனாதிபதி சமர்ப்பித்த கடிதமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் SJPP கட்சி இரண்டாக பிளவு படும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பனம் செலுத்தியமை ஜனாதிபதி தமது கட்சியை பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாக SLPP கருதுகிறது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட்டால் SLPP முன்வைத்த கோட்டாவை வழங்க ஜனாதிபதி நிராகரித்துள்ளதால் இக்கட்சிகளுக்கு இடையில் மேலும் பிளவு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் SLPP இன் ஜனாதிபதி வேட்பாளரை அக்கட்சி உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கா விட்டாலும் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா வேட்பாளராக பெயரிடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் முடிவை ஏற்கமுடியாது, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.