ஜனாதிபதி தேர்தல் : மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலுக்கு ஆதரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி தேர்தல் : மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதிக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள  பிரமித பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4