தனியாக களமிறங்கும் ரணில் இதயத்தை தேர்ந்தெடுக்கவுள்ளார்!

#SriLanka #Election #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
தனியாக களமிறங்கும் ரணில் இதயத்தை தேர்ந்தெடுக்கவுள்ளார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். முதலாவதாக கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலில் முதலில் கட்டுப்பணத்தை செலுத்துபவர் தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் சின்னங்களில் தங்களுக்கு விருப்பமான சின்னத்தை ​தெரிவு செய்ய முடியும்.

 இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு புதிய சின்னங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த சின்னங்களில் இதய சின்னமும் உள்ளது. முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதயத்தை சின்னமாக தேர்ந்தெடுக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல், வெள்ளிக்கிழமை (26) அன்று வெளியானது. அதனையடுத்து கட்டுப்பணம், ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் முதலாவதாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4