இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் பலி!

இலங்கையின்கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

உப்புவெளி, வெலிப்பன்ன, கேகாலை மற்றும் மெட்டியகொட ஆகிய இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 உப்புவெளி, கிளிகுஞ்சிமலை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதிய விபத்தில் 39 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  

மேலும், வெலிப்பன்ன லெவ்வந்துவ சந்தியில் வீதியைக் கடந்த 62 வயதுடைய பெண் ஒருவர் லொறியில் மோதியதில் பலத்த காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, கேகாலை பல்லப்பன பிரதேசத்தில் வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிள் இராணுவ லொறியுடன் மோதியதில் 66 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 

மெட்டியகொட வாரெல்லன பிரதேசத்தில் வீதியைக் கடந்த 78 வயதுடைய நபர் ஒருவர் முச்சக்கரவண்டி மோதியதில் பலத்த காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4