டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை

#SriLanka #Dengue
Mayoorikka
3 months ago
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

மேல் மாகாணத்தின், கொழும்பு மாவட்டத்தில் 7, 613 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,453 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,781 பேரும் பதிவாகியுள்ளனர்.

 இந்த மாதத்தில் மாத்திரம் 40,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32,301 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!