கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் அநுரகுமார!
தனது அரசியல் வாழ்வில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இடதுசாரி தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவும் வருகை தந்திருந்தார்.
பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு வருகைத்தந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் "தோழர் பாகுவிற்கு என்ன நடந்தது?” என நவ சமசமாஜ கட்சியின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் கேட்டுள்ளார்.
"அந்த கடவத்தை கூட்டத்தில் சுடப்பட்டதுதான் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது" என அங்கிருந்த கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 1990 ஆம் ஆண்டு கடவத்தையில் ஐக்கிய சோசலிச முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றும் போது விக்ரமபாகு கருணாரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசப்பற்றாளர் மக்கள் இயக்கத்தினரால், LMG ரக இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டார்.
தமிழ் மக்களுக்கு ஓரளவு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதாக நம்பப்பட்ட மாகாண சபைகளை பாதுகாப்பதில் சிங்கள மக்கள் மத்தியில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையே இதற்குக் காரணம்.
வயிற்றில் பொலிந்த குண்டுமழையால் கீழே விழுந்த விக்ரமபாகுவை, அப்போது அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த இருந்த ஞானசிறி கோத்திகொட தலைமையிலான சகோதரர்கள் உயிரைப் பணயம் வைத்து வைத்தியாலைக்கு கொண்டு சென்றமையால் அவர் மரணத்திலிருந்து தப்பினார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாடக கலைஞர் தேவ பண்டார சேனாரத்ன துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.