கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கிராண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கொலையைச் செய்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

26, 37 மற்றும் 45 வயதுடைய ஒருகுடவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 25ஆம் திகதி கிராண்ட்பாஸ் வண்டுலவத்தை புராதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் சென்ற சிறுவனும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4