பாரிஸ் ஒலிம்பிக் - முதல் தங்கம் வென்ற கனடிய வீராங்கனை

#Canada #Gold #Medals #Olympics #Paris
Prasu
3 months ago
பாரிஸ் ஒலிம்பிக் - முதல் தங்கம் வென்ற கனடிய வீராங்கனை

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவின் சார்பில் முதல் தங்கப்பதக்கம் வென்றெடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டா டெகுச்சி என்ற கனடிய வீராங்கனை இவ்வாறு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 28 வயதான கிரிஸ்டா, ஜூடோ போட்டியில் 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் இவ்வாறு தங்கம் வென்றுள்ளார்.

தென்கொரியாவின் ஹு மீமி என்ற வீராங்கனையை வீழ்த்தி கிறிஸ்டா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கனடாவின் சார்பில் இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்றெடுக்கப்பட்ட முதல் தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கிரிஸ்டா குறித்த தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை கிறிஸ்டா பெற்று கொடுத்துள்ளார். இந்த வெற்றி பெரு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!