ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு  பிற்போடப்பட்டுள்ளது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது. 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவ சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கட்சியின் அரசியல் குழு கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தது.

இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானத்திற்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் அடுத்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4