ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய விக்னேஸ்வரன்!

#SriLanka #C V Vigneswaran
Mayoorikka
2 years ago
ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய  விக்னேஸ்வரன்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர மாவட்ட செயலாளர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிய அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரன் எம்.பியால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியபோதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 எனவே, நிரந்தர மாவட்ட செயலாளர்களை நியமிக்குமாறு கோரியே இந்த அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த விடயம் தொடர்பில் இன்று முதல் 3 நாள் பயணமாக வடக்கே வரும் ஜனாதிபதியிடம் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4