இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது குறித்து நாளை (05.08) தீர்மானம் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ-விசா சேவையை வழங்க மத்திய அமைச்சர்கள் குழு எடுத்த தீர்மானத்தை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது. 

இதன்படி, ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் ஒன்லைன் முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பான இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீசா பெறுவதற்கு பணம் செலுத்திய நபர்களுக்கு அது தொடர்பான பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4