நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் - ரணில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் - ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள தந்திரோபாய வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவில்லையென்றால், மேலும் ஒரு வரிசை யுகத்தை நாம் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வல்லுனர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பது சகல தொழில் வல்லுனர்களினதும் பொறுப்பாக இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டினார். 

இக்கூட்டத்தில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மகளிர் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பெருந்திரளான மக்கள் திரண்டு வந்துள்ளனர்.  

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4