பிறந்து 45 நாட்களேயான குழந்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய தாய் : யாழில் சம்பவம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிறந்து 45 நாட்களேயான குழந்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய தாய் : யாழில் சம்பவம்!

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

குறித்த குழந்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 

நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.  

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தை அதிகாலை 4 மணிக்கு மயக்க நிலையில் இருந்தது.  

இந்நிலையில் அளவெட்டி வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றவேளை, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூற்று பரிசோதனைகளில் இயற்கையான மரணம் இல்லை என தெரியவந்துள்ளது. குழந்தையின் கை மற்றும் கால்கள் முறிவடைந்துள்ளன. குழந்தையின் தலையில் பாரிய காயம் உள்ளதுடன் காதிலும் காயங்கள் உள்ளன. 

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.  

இந்நிலையில் 33 வயதுடைய குழந்தையின் தாயார் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4