ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு திட்டமிட்டுள்ளது.  

இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த குழு திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  வியானி குணதிலக்க தெரிவித்தார்.  

இதற்கிடையில் பொலிஸ் மா அதிபருடனான பிரச்சினை காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் திரு வியானி குணதிலக்கவிடம் பொது பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளரும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.  

அதன்படி தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபர் பிறப்பிக்கும் உத்தரவுகள், தேர்தல் கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான பணம் செலுத்துதல் போன்றவை. செயலாளரால் மேற்கொள்ளப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4