60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5% வட்டி விகிதம் 2.5% அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச வங்கிகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டி விகிதம் அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரை 2 ஆண்டுகளுக்கு 10% ஆக வழங்கப்படவுள்ளது.