ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று (07) காலை 7.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை என  தம்மிக்க பெரேரா நேற்று (06.08) அறிவித்திருந்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கடிதத்தில்  தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். 

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மை முன்மொழிந்தமைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச எம்.பி நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4