நடிகர் விஜய்க்கு இப்பொழுதும் பக்க துணையாக நிற்கும் நடிகர்

#Cinema #Actor #Tamil #Kollywood
Prasu
1 month ago
நடிகர் விஜய்க்கு இப்பொழுதும் பக்க துணையாக நிற்கும் நடிகர்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் இளவரசு. இவர் ஒளிப்பதிவாளரும் நடிகருமாவார். இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

இவர் தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். இவர் பாரதிராஜா, சேரன் ஆகியோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறைககு வந்தார்.

இதுவரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வாத்தி படத்தில் நடித்துள்ளார். 

images/content-image/1723056336.jpg

அது போல் விடுதலை பகுதி 1 படத்திலும் இளவரசு என்ற கேரக்டரிலேயே நடித்துள்ளார். சினிமா அரசியல் இரண்டுமே மக்களோடு நேரடியாக பின்னி பிணைந்து இருக்கக்கூடிய இரண்டு விஷயங்கள். 

அந்த வகையில், சினிமாவில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் இளவரசு. நடிகர் விஜய்யுடன் இருக்கும் இந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் இளவரசு தான். 

images/content-image/1723056345.jpg

பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் துணை நடிகராகவும் நடித்திருக்கும் இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பூவே உனக்காக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் உடன் இளவரசு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை தான் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.