ஒலிம்பிக் போட்டியை பார்க்க பாரிஸ் சென்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#Minister #Indian #Udayanidhi #Olympics #Paris
Prasu
3 months ago
ஒலிம்பிக் போட்டியை பார்க்க பாரிஸ் சென்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை காண தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் பாரீஸ் சென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33 -வது ஒலிம்பிக் போட்டியை காண இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரீஸ் சென்றார்.

அவருடன் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் சென்றுள்ளனர். உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

இந்தியாவின் சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்க சென்றுள்ளனர். இவர்களில் பஞ்சாப் மற்றும் அரியானாவை அடுத்து தமிழ்நாடு அதிக வீரர்களை அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 11 வீரர், வீராங்கனைகள், 6 மாற்றுதிறனாளிகள் உள்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

 இந்திய விளையாட்டு துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே லட்சியம் என்று அமைச்சர் உதயநிதி கூறி வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!