பிரித்தானிய கலவரம் - இன வெறுப்பை தூண்டிய நபர் கைது

#Arrest #Protest #England
Prasu
3 months ago
பிரித்தானிய கலவரம் - இன வெறுப்பை தூண்டிய நபர் கைது

சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரித்தானியாவில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை ஊக்குவித்த குற்றத்திற்காக முதல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஒருவார காலமாக பிரித்தானியாவின் பெரும்பாலான நகரங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்தன.

தீவிர வலதுசாரி அமைப்புகள் நேரடியாக தெருக்களில் இறங்கியும், சமூக ஊடகங்கள் வழியாகவும் வெறுப்பினை பரப்பி கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய தெருக்களில் அமைதியின்மையை ஏற்படுத்திய கலவரக்காரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியாக வெறுப்பினை தூண்டி அமைதியின்மை ஏற்படுத்திய ஜோர்டான் பார்லர்(Jordan Parlour) என்ற நபர் கைது செய்யப்பட்டு முதல் நபராக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 இன வெறுப்பு தொடர்பாக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் எழுதிய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோர்டான் பார்லருக்கு லீட்ஸ் கிரவுன் நீதிமன்றம் 20 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!