நல்லூர் கோவிலில் பௌத்த பிக்குகளுக்கு ஒரு சட்டமா? சுப்ரமணிய பிரபா கேள்வி

#SriLanka #Temple #Nallur
Prasu
3 months ago
நல்லூர் கோவிலில் பௌத்த பிக்குகளுக்கு ஒரு சட்டமா? சுப்ரமணிய பிரபா கேள்வி

பாரதப்பிரதமரையே மேலாடையுடன் உள்ளே வர அனுமதிக்காத நல்லூரான் நிர்வாகம் பிக்குகளிடம் சோரம் போய்விட்டதா வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லையென்று வர்த்தமானியில் அறிவித்தல் விட்டு விட்டு பிக்குகளின் வாகனத்தை மட்டும் உள்ளே விடுவதா?

பொலிஸ்காரர் என்ன செய்கிறார்கள் நிர்வாகத்தினர் என்ன செய்கின்றனர் மாநகரசபை என்ன செய்கிறதென ஆளாளுக்கு கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் அப்பன் முருகனின் அருட்செய்தி என்னவென்றால் ஐயன்மீரே நானிருந்த அருட்பதியை உடைத்தழித்து ஆங்கிலேயர் மாதாகோவில் கட்டினார்கள் அது இன்னும் அங்கேயேதானிருக்கிறது அதற்கு இன்றும் இதே யாழ் மக்கள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை.

சரி போகட்டும் இதோ இந்த மையவாடிக்கு பக்கத்தில் ஒதுக்குப்புறத்தில் கட்டிக்கொள் என ஒரு துண்டு நிலத்தை கொடுத்தார்கள் அதில் நான் வந்து ஒண்டிக்குடித்தனம் நடத்துகிறேன் உள்ளே ஒரு சமாதியும் இருக்கிறது சமரசம் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 

நானிருப்பதோ இலங்கையெனும் தீவினுள் இங்கேயிருக்கிறது ஒரு சட்டம் அது பெரும்பான்மையினத்தினரின் சட்டம் அதுதான் இந்நாட்டின் அரசியலமைப்பு என்றும் சொல்கின்றனர். 

அந்த அரசியலமைப்பில் முதல் வரியிலேயே பெளத்தத்திற்கு முன்னுரிமை என்று எழுதியதோடு பெளத்த மதத்தையும் பெளத்த சாசனத்தையும் பேணிப்பாதுகாப்பது அரசின் கடமை என்று கொட்டெழுத்தில் எழுதியும் விட்டார்கள் என் கட்டியமெல்லாம் அதன் முன் செல்லாக்காசு செல்லங்களே.

நான் தேரில் வந்தால் நீ விரும்பினால் கும்பிடலாம் விரும்பாவிட்டால் போகலாம் பிரச்சினை இல்லை முன்னிருக்கை எனக்குத்தான் வேண்டுமென எந்த சட்டங்களும் போட்டுக்கொண்டவனல்ல நான் கோவணமே போதுமென்று கோவித்துக்கொண்டு மலையேறியவன் நான். 

ஆனால் இலங்கைத்திருநாட்டின் பிக்குக்களோ இந்த நாட்டின் முதன்மை பிரஜைகள் அதிமேதகு ஜனாதிபதி கூட அவர்களின் காலில் விழவேண்டும் அவ்வளவு ஏன் இந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கும் போதுகூட அவர்கள் எழுந்து நிற்கமாட்டார்கள்.

அப்படியாப்பட்ட அரசியலமைப்பில் முதன்மை இடம் கொடுக்கப்பட்ட அவர்களை தம்மாத்தூண்டு நோட்டிஸ் போர்ட்டினை வைத்து வாகனம் நுழையத்தடை இறங்கி நடந்து போ என்று சொல்ல யாருக்கு துணிவுண்டு? அப்படி சொல்லத்தான் முடியுமா? 

வேலுண்டு வினையில்லை என்று பாட்டிப்பாடிக்கொண்டு அரசியலமைப்பை எதிர்த்து நின்றால் அதிமேதகு ஜனாதிபதித்துமனி கூட அரைக்காற்சட்டையும் களி திண்ணப்போகவேண்டிவருமென்பதை நீ உணர்வாயா பக்தா? என்னை கோவணத்துடன் கும்புடுவாய் அவர்களை அக்கோலத்தில் பார்க்க சகிக்குமா?

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!