வைத்தியர் அர்ச்சுனா அரசியலில் ஈடுபடவுள்ளாரா? : அவரே வழங்கிய வாக்குமூலம்!
நான் அரசியலில் எங்கு நிற்கிறேன் என எல்லாருமே கேட்டார்கள். நான் அடிப்படையாக ஒரு தமிழ் உணர்வு மிக்கவன். அப்பாவிடம் அடிக்கடி கேட்பேன் 1985 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்து யாழ்ப்பாணத்திலே போராட்டத்திலே இணைந்து கொண்டீர்கள் என்று. அதற்கு அவர் எனக்கு சொன்ன பதில் தமிழும் தாய் நிலமும் எங்கள் மூச்சு, இரு கண்கள் என்றார்.
அவனுடைய மடிக்கில் இருந்து வளர்ந்தவன் நான், அண்ணாவிடமும் சொல்லி இருக்கிறேன் அண்ணா நான் இன்றோ நாளையும் மரணித்தால் அந்த 44 ஆயிரத்து ஒன்றாக என்னை இணைத்துக் கொள் தம்பி செத்துப் போய்விட்டேன் என்று கவலைப்படாதே, தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை எங்களை நாமே ஆள வேண்டும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
போலி தமிழ் தேசியம் கதைத்து பாராளுமன்றத்தில் ஒன்றை கதைத்து மக்களிடம் ஒன்றை கதைத்து மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணிக்கொண்டே இருப்பவன் அல்ல நான். நெஞ்சில் துணிவு இருப்பவர்கள் தயவு செய்து இதை எழுதிக் கொள்ளுங்கள். எனது கார் இலக்கம் NPCAT 87 98 ஒரு வெள்ளை VEZEL என அழைக்கப்படும் கார். நான் எனது காரில் தான் சாகும்வரை பயணிப்பேன்.
நான் பொய்யாக கூட்டம் கூட்டி ஆக்களுடன் செல்வதில்லை. உங்களைப் போல் போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மக்களிடம் மக்களை பகைத்துக் கொண்டு ஒளித்து ஓடிய அரசியல் செய்ய வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை. எனது உயிர் இன்றோ நாளையோ பிரிந்து போனால். அது இன்றோ நாளையோ? ஒரு தமிழனின் கையாலே நான் சாவேன்.
ஆனால் அதுவரை தமிழுக்காக வாழ்வேன் எனது தந்தையும் அவ்வாறே வாழ்ந்தார். என்னை சுடுவதற்காக ஐந்து லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தான் ஒரு குரல் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். அவற்றை நான் புலனாய்வு போலீஸ் இடம் கொடுப்பதற்காக இருந்தேன்.
ஆனாலும் மீண்டும் யோசித்தேன் அதன் மூலம் பாதிக்கப்படுவது மீண்டும் ஒரு தமிழ் அரசியல்வாதியே. மட்டக்களப்பு மண் இதுவரை நான் பார்த்ததில்லை மட்டக்களப்பு வாசம் எனக்கு தெரியாது மீண்டும் மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ இல்லை முல்லை தீவிலோவெகு விரைவில் நாங்கள் சந்திப்போம். எனது கண்கள் மூடப்படுவதற்கு முன்பாக என் கண்களால் மட்டக்களப்பையும் திருகோணமலையும் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன்.
தலைவரின் கையால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பில் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். தலைவரின் இதயத்தை குத்தியவர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.. தனியே தான் வருகிறேன் ஆகையால் தயவுசெய்து முதுகில் சுட வேண்டாம் உங்களால் முடிந்தால் நேருக்கு நேரில் வந்து சுட்டுப் பாருங்கள்.
நான் தமிழின துரோகி அல்ல தமிழர்களின் தம்பி..
வால்வோ சாவோ அது இன்றோ அல்லது நாளையோ துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை. நாங்கள் மிக விரைவில் சந்திப்போம். நல்லூரில் கூட நீங்கள் என்னை சுடலாம்.
அங்கு சுட்டால் கூட தியாகி திலீபனின் உயிர் போன இடத்தில் இந்த உயிர் போகலாம்.