கனடாவில் ஹோட்டலில் குண்டு வைத்ததாக கூறிய நபர் கைது
கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் ஹோட்டல் ஒன்றில் குண்டு வைத்ததாக கூறிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கொண்டு வைத்துள்ளதாக குறித்த நபர், ஏனைய அறைகளில் தங்கி இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த தகவலை அடுத்து குறித்த அறைக்கு அருகாமையில் தங்கி இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
குண்டு செயல் இழக்க செய்யும் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குண்டு பீதியை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியிருந்த நிலையில் பொலிஸார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.
4 மணித்தியால சோதனைகளின் பின்னர் குறித்த ஹோட்டலில் குண்டு எதுவுமில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் குண்டு வைக்கப்பட்டதாக எதனால் கூறினார் என்பது குறித்தும், தெளிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.