இலங்கையின் பல பகுதிகளில் 100 MM மழை பெய்ய வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் பல பகுதிகளில் 100 MM மழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13.08)  100 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக தீவு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4