ஜனாதிபதி தேர்தல் : பிணைப் பணம் வைப்பிலிடுவதற்கான இறுதி திகதி அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் : பிணைப் பணம் வைப்பிலிடுவதற்கான இறுதி திகதி அறிவிப்பு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான பிணைப் பணத்தை வைப்பிலிடுவது நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 32 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இதில் அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் என 15 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிணைப் பணத்தை மற்றுமொரு குழுவினர் இன்று (13) வைப்பிலிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது வரும் (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 11 மணி வரை அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல் அலுவலகம் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4