ஜனாதிபதி தேர்தல் : சட்டவிரோதமாக வழங்கப்படும் கலால் அனுமதி பத்திரங்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் : சட்டவிரோதமாக வழங்கப்படும் கலால் அனுமதி பத்திரங்கள்!

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதே முறைப்பாட்டை இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் நேற்று (12.08) தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.  

முறைப்பாட்டை கையளித்த பின்னர் பேசிய இலங்கை மதுபான உரிமம் வழங்கும் சங்கத்தின் உப தலைவர்  பிரசன்ன விதானகே, தற்போது 200க்கும் மேற்பட்ட புதிய கலால் உரிமங்களை வழங்குவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

 மேலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முந்தைய தேதிகளுடன் சுமார் 6 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4