நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி : மூவர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி : மூவர் படுகாயம்!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி  விபத்துக்குள்ளானதில்  மூவர் படுகாயமடைந்து ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்தனர்.  

முச்சக்கரவண்டியில் பயணித்த மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரே விபத்தில் சிக்கியுள்ளனர்.  

வெளிநாட்டு வேலைக்காக புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

முச்சக்கரவண்டி சாரதி, வெளிநாடு செல்வதற்காக பயணித்த நபர் மற்றும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹலவத்தை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4