தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : சிறுமி உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : சிறுமி உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன், டயர்களின் காற்றழுத்தம் காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கதிர்காமம் ஓர்டோகந்த பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 02 மாத வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

விபத்து இடம்பெற்ற போது வேனில் சிறுவர்கள் உட்பட 12 பெரியவர்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4