ஜனாதிபதி தேர்தல் : வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (15.08) நடைபெறவுள்ளது.
ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததாகவும், அதன்படி 40 வேட்பாளர்கள் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், எழுந்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.