பங்களாதேஷுக்கு பொருளாதார உதவிகளை வழங்கும் இலங்கை : ரணில் உறுதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பங்களாதேஷுக்கு பொருளாதார உதவிகளை வழங்கும் இலங்கை : ரணில் உறுதி!

ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் காபந்து அரசாங்கத்தின் தலைவர் திரு.முஹம்மட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காபந்து அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கு தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி யூனுஸிடம் கூறியுள்ளார்.  

பங்களாதேஷுக்கு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இங்கு உரையாற்றிய பங்களாதேஷ் தலைவர், ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஜனாதிபதி விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுக்க தேவையான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4