ரணிலின் கீழ் வரும் மூன்று முக்கிய அமைச்சுகள் : அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ரணிலின் கீழ் வரும் மூன்று முக்கிய அமைச்சுகள் : அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை வைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.  

முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் பதவிகளை இழந்தமையினால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்டன. 

இதன்படி, இந்த அமைச்சுப் பதவிகளை தனது பொறுப்பில் வைத்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4