சர்ச்சையில் சிக்கிய கனடா-ஒன்றாரியோ மாகாண முதல்வர்

#Canada #ChiefMinister
Prasu
3 months ago
சர்ச்சையில் சிக்கிய கனடா-ஒன்றாரியோ மாகாண முதல்வர்

கனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அண்மையில் கூறிய நகைச்சுவை கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிருக வைத்திய சாலையில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவது தொடர்பில் அவர் நகைச்சுவை ஒன்றை கூறி இருந்தார்.

அண்மையில் குயின்ஸ் பாக்கில் பாரிய மிருக வைத்தியசாலை ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த வைத்தியசாலை தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார் கனடாவில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் நிலவிவரும் நெருக்கடி நிலைமையை விமர்சனம் செய்யும் வகையில் அவர் இந்த கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

மிருக வைத்திய சாலையில் நோயாளர்கள் எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்களை செய்ய நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மிருக வைத்திய சாலையில் நோயாளர்களுக்கு ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

முதல்வர் டக் போர்ட்டின் இந்த கருத்து இழிவான கருத்து எனவும் இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஒன்றாறியோ மாகாண எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

 நீண்ட காலமாக திட்டமிட்ட அடிப்படையில் சுகாதார நலனுக்கு நிதியை ஒதுக்காத அரசாங்கம் தற்பொழுது நகைச்சுவை செய்து வருவது கண்டிக்கத்தக்கது என எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!