கிளிநொச்சியில் நடைபெற்ற KCL தொடரின் பீனிக்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்வு

#Kilinochchi #sports
Prasu
1 year ago
கிளிநொச்சியில் நடைபெற்ற KCL தொடரின் பீனிக்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்வு

கிளிநொச்சி துடுப்பாட்டச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் KCLஎனும் துடுப்பாட்டத்தொடர் போட்டியொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்டத்தில்தெரிவு செய்யப்பட்ட எட்டுஅணிகள் பங்கு பற்றவுள்ளன. இதன் முதலாவது போட்டி 19.8.2024 ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு நான்கு இலட்சம் ரூபா பணப் பரிசும் மற்றும் சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

images/content-image/1723919171.jpg

இந்தப்போட்டியில் பங்குபற்றும் பீனிக்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சி சோலைவனம் விருந்தகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் அணியின் இணை உரிமையாளர் கி.விக்னராஜா துடுப்பாட்ட சங்க செயலாளர் சுந்தரலிங்கம், மரணவி சாரனை அதிகாரி திருலோகமூர்த்தி ஓய்வுநிலை அதிபர் திருமதி.ஜெ.தனபாலசிங்கம், ஜெயசுதர்சன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் த.சேதுபதி, கிளிநொச்சி மக்கள் அமைப்பின் நிர்வாக இணைப்பாளர் மயூரன் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர்.

பீனிக்ஸ் அணியின்உரிமையாளர் கி.விஜயராஜன்(விஜயன்) என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1723919183.jpg

images/content-image/1723919195.jpg

images/content-image/1723919210.jpg

images/content-image/1723919229.jpg

images/content-image/1723919242.jpg

images/content-image/1723919256.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4