பிம்ஸ்டெக் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது - ரணில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
பிம்ஸ்டெக் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது - ரணில்!

வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் வளர்ச்சியின் மையமாக மாறிவரும் நிலையில் பிம்ஸ்டெக் அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

நேற்று (17) அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழியில் நடைபெற்ற 'உலகளாவிய தெற்கின் குரல்' மாநாட்டின் அரச தலைவர் அமர்விற்காக ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் "ஒரு நிலையான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகளாவிய தெற்கு" என்ற தொனிப்பொருளில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மேற்கத்திய நாடுகள் உலகளாவிய தலைமைத்துவத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ள நிலையில், இவ்வாறானதொரு நிலையில் பூகோள தெற்கை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

பிம்ஸ்டெக் சங்கத்தின் உறுப்பினராக, இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடன், ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை உருவாக்கும் நோக்கத்துடன், பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) இலங்கை அங்கத்துவத்தைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!