தேர்தலில் ரணிலுடன் கைக்கோர்க்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தேர்தலில் ரணிலுடன் கைக்கோர்க்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க கட்சியின் தேசிய சபை இன்று (18.08) தீர்மானித்துள்ளது. 

கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார். 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.  

இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் திரு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4