ஜெர்மனிக்கும் - சுவிட்சர்லாந்திற்கு இடையில் இயக்கப்படும் புதிய ரயில் சேவை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வடமேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாகாணத்தில் உள்ள சியாசோவில் இருந்து பாசெலுக்கு ரயில் பயணத்தை மேற்கொள்ள சோதனை ஓட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் லுட்விக்ஷாஃபெனில் இருந்து இத்தாலியில் உள்ள கல்லரேட் வரை சுரங்க பாதை வழியாக சரக்கு ரயில் ஒன்று சோதனையாக இயக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் இருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பதாக தண்டவாளங்களை சுத்தம் செய்வதற்கான கூடுதல் சோதனைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து மற்றும் டிசினோ இடையேயான இன்டர்சிட்டி, யூரோசிட்டி மற்றும் சரக்கு ரயில்கள் செப்டம்பர் 2 முதல் கோதார்ட் பேஸ் டன்னலைப் பயன்படுத்த முடியும் என்று SBB/CFF கூறுகிறது.