சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள் அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள் அதிகரிப்பு!

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள்  அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  

கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து மேலும் விளக்கமளிக்கும் நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா, "இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தையின் ஆஸ்துமாவாக இருக்கலாம். இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

ஏற்கனவே பல இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இது போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுகின்றன. குறிப்பாக மேல் சுவாசக்குழாய் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது.  

எனவே, இருமல், சளி இருந்தால், அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். எனவே, குழந்தைகளுடன் கவனமாக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!