சோரம்போகும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்னிடம் இல்லை! சஜித்

#SriLanka #Election #Sajith Premadasa
Mayoorikka
3 months ago
சோரம்போகும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்னிடம் இல்லை! சஜித்

நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை தான் நிராகரித்ததாகவும், அந்தப் பிரதமர் பதவிக்கான மக்கள் வரம் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் சந்தர்ப்பவாத பெருச்சாளித்தன அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு தமக்கு விருப்பமில்லை. 

அந்தக் கொள்கையினால் தான் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்க்குமாறு கூறிய போதும் அதனை தான் நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

 அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்த நாட்டை சூறையாடி வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் பாதுகாவலராக தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திருடர்களை பாதுகாக்கின்ற வாயில் காவலாளியாகவும் இருந்திருப்பேன்.

 எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு தயார் இல்லை. எந்த ஒரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயல்படபோவதில்லை. 

சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முழு நாடும் மலை போல் இருக்கும் கடனுக்குள் சிக்கி இருக்கிறது. 

மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள 220 இலட்சம் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை வளப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் திங்கட்கிழமை (19) மாலை மீரிகம நகரில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!